தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கீழ அலங்கார தட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையக் கட்டிடத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பொன்னகரம் பகுதியில் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்ட நபருக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் மருந்து பெட்டகத்தை வழங்கினார். அருகில் மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.



