சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் 258 மண்டலதேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளதாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல தேர்தல் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு கடலூர் மாவட்டத் தில் உள்ள திட்டக்குடி, விருத்தாச லம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி,சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 225 இடங்களில் 2,590 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 9 சட்டமன்ற தொகு திகளுக்கும் மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ள னர். அதன் அடிப்படையில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி யில் 27 மண்டல அலுவலர்களும், விருத்தாசலம் தொகுதியில் 32 அலுவலர்களும், நெய்வேலியில் 24, பண்ருட்டி 26 அலுவ லர்களும், கடலூர் 29, குறிஞ்சிப்பாடி 29, புவனகிரி 31, சிதம்பரம் 31, காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகு தியில் 29 மண்டல அலுவலர் களும் என மொத்தம் 258. மண் டல தேர்தல் அலுவலர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குறைந்தபட்ச மற்றும் அத்தியாவசிய அடிப் படை வசதிகள் அமைந்துள்ளதை உறுதி செய்திடவும். 28.2.2026க்கு முன் 3 முறை தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச் சாவடியை நேரில் ஆய்வு செய்து, வாக்குச்சாவடிகளின் – வரைபடத்தினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண் டும். மேலும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவது மற்றும் புதிதாக உருவாக்கப் பட்ட வாக்குச்சாவடிகள் குறித்து வாக்காளர்களுக்கு மண்டல அலுவலர்கள் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை மைய அலுவலர் கள் தேர்தலுக்கு முன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் அமைந்துள்ளதை உறுதி செய்திட வேண்டும். கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக பதிவான வழக் குகள் விவரம் மற்றும் பாலின விகிதம் வழங்கிட வேண்டும். மேலும் வாக்குச்சாவடிகளின் விரிவான வழித்தட வரைபடம் வழங் கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி, கலெக்டரின் நேர்முக உதவி யாளர்கள் (பொது) செல்வன், (தேர்தல்) திருநாவுக்கரசு உள் பட பலர் கலந்து கொண்டனர்.



