fbpx
Homeபிற செய்திகள்நேரடி நெல் கொள்முதல் நிலையம்: கலெக்டர் ஆய்வு

நேரடி நெல் கொள்முதல் நிலையம்: கலெக்டர் ஆய்வு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கலெக்டர் சிபி ஆதித்யா ஆய்வு செய்தார். நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடப்பு ஆண்டு வரையான பருவத்தில், 71 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 3,705 விவசாயிகளிடமிருந்து 47,255.320 மெ.டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், 32 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை சரி வரமேற் கொள்ளவும்,நெல்லுக்கு அரசு நிர்ணயித்துள்ள அளவின் படி, ஈரப்பதம் குறித்து கணக்கீடு செய்யவும், கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல்லை உலர்த்துவதற்கு தேவையான தார்பாய்களை வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பணியாளர்களின் தினசரி வருகை, கடைகள் மற்றும் மாலுமியார் பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் பதிவேடு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் 3 நியாயவிலைக் கடைகளி பொது வினியோக திட்டப் பொருட்களின் விற்பனை மற்றும் இருப்பு குறித்தும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கமணி, நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img