சென்னை எழும்பூரில் உள்ள ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மார் ஷல்ஸ் ரோட்டில் இ போனி (EPIONE) நிறுவனத்தின் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது.
இது, வலி நிவாரண மையம் மற்றும் வலிக்கு அப்பாற்பட்ட ஆர்த்தோ நரம்பியல் மற்றும் மீளுருவாக்கம் சிகிச்சை மையமாகும்.
ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் எஸ். பிரகாஷ் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். அம் ரித் குரூப் ஆப் ஹாஸ் பிடல்ஸ் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.சோகன்ராஜ், விமலா சோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இபோனியின் நிறுவனர் மற்றும் இயக்குனர், வலி மருத்துவத்தின் தலை வரான டாக்டர் சுதீர் தாரா, இபோனியின் மருத்துவத் தலைவரும், தலைமை ஆலோசகரும் வலி மருத்துவருமான டாக் டர் சேத்தனா சேத்தன் ஆகியோர் மையத்தை துவக்கி வைத்தனர்.
டாக்டர் சுதீர் தாரா பேசும்போது, “நீண்ட காலமாக நாள்பட்ட மூட்டுவலி நோயாளிக ளுக்கு சிகிச்சையளித்ததில் இருந்து, சிலர் கடைசி கட்டம் வரை வலியால் அவதிப்படுவதை உணர்ந்தேன்.
அப்படிப்பட்ட நோ யாளிகள் முதுமையில் வலியை அனுபவிக்காமல் இருக்க, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி யதன் அவசியத்தை அப்போது உணர்ந்தேன்.
மீளுருவாக்கம் அல்லது புத்துணர்ச்சி சிகிச்சை துறையில் தீவிர ஆராய்ச் சிக்குப் பிறகு நான் 10,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளேன். அவர்கள் இப்போது வலியற்ற, குணமடைந்த வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
மருத்துவத் தலைவரும், தலைமை ஆலோசகரும் வலி மருத்துவருமான டாக் டர் சேத்தனா சேத்தன் கூறுகையில், ‘வலி மருந்து என்பது அலோபதி மருத்துவத்தின் ஒரு கிளையாகும்’ என்றார்.



