fbpx
Homeதலையங்கம்யெச்சூரிக்கு வாழ்த்துகள்!

யெச்சூரிக்கு வாழ்த்துகள்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது தேசிய மாநாடு கேரளத்தில் 5 நாள்களாக நடந்தது. இறுதி நாளில் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்களாக 17 பேரும், மத்திய குழு உறுப்பினர்களாக 85 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த மூத்த தலைவரான ராம் சந்திர போஸ் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தலித் தலைவர் அவரே.

இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், ஆல் இந்திய கிசான் சபா தலைவர் அசோக் தாவ்டே ஆகியோரும் அக்கட்சியின் அரசியல் தலைமை குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

75 வயதைக் கடந்து விட்டதால் கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பீமன் போஸ், ஆனான் மொஸ்லா ஆகியோர் அக்குழுவில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

மத்திய குழுவின் 85 உறுப்பினர்களில் 17 பேர் புது முகங்கள் ஆவர். புதிய உறுப்பினர்கள் அனைவரும் 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பர் என மார்க்சிஸ்ட் கட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவ, மதவாத கொள்கைகளை மக்களிடையே பரப்பி வரும் பி.ஜே.பி.யை தனிமைப்படுத்தித் தோற்கடிப்பதே முக்கிய பணியாக உள்ளது.

அக்கட்சியை தோற்கடித்தால் அது மக்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவை மதசார்பற்ற ஜனநாயக, குடியரசு நாடாகவும் தொடர்ந்து திகழச் செய்யும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக 3ம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரிக்கு வாழ்த்துக்கள்!

படிக்க வேண்டும்

spot_img