விடியல் ஆரம்பம் அறக்கட்டளை மற்றும் இயற்கை பெருக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் இணைந்து நடத்திய அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்கும் விழா ஈரோட்டில் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் கலந்து கொண்டு கல்வியின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
நிகழ்வில் குமாரபாளையம் அனைத்து வணிகர்கள் சங்கச் செயலாளர் விடியல் பிரகாஷ், துணைச் செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 100க்கும் அதிகமான பள்ளி மாணவ, -மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தகம், எழுதுப்பொருட்கள், தேர்வு அட்டை, பைல் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப் பட்டன.



