fbpx
Homeபிற செய்திகள்விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கைத்தறியில் நெய்யப்பட்ட உருவப்படம் அறிமுகம்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கைத்தறியில் நெய்யப்பட்ட உருவப்படம் அறிமுகம்

தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை ராமநாதபுரத்தில் உள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிலையத்தில் கைத்தறி மூலம் நெய்யப்பட்ட அவரது உருவப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சில்க் வில்லேஜ் ஆராய்ச்சி மைய நிறுவனர் கைத்தறி முருகேசன் உருவப்படத்தை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கைத்தறியில் நெய்யப்பட்ட முதலமைச்சரின் உருவப்படங்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும், பல ஆண்டுகளாக நலிவடைந்துள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த உருவப்படம் ஜக்கார்டு தொழில்நுட்ப முறையில் கைத்தறியில் ஐந்து நாட்கள் தொடர்ந்து நெசவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று எந்தவொரு புகைப்படத்தையும் கைத்தறி நெசவு வடிவில் உருவாக்கி வழங்க முடியும் என ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img