fbpx
Homeதலையங்கம்பொதுக்கூட்ட மேடையாக இருக்க வேண்டாம்

பொதுக்கூட்ட மேடையாக இருக்க வேண்டாம்

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற மரபுகளையே பின்பற்றும் நாம் பேரவைத் தலைவர், முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் என்று அரசமைப்பின் படியான பொறுப்புகளை குறிப்பிட்டு விளிப்பதே சரியானதாக இருக்க முடியும்.

உறுப்பினர்கள் தங்களது கட்சி தலைவராக இருக்கும் முதல்வரை குறிப்பிடுகையில் கட்சியினரால் சூட்டப்பட்ட அடைமொழிகளை தவிர்ப்பதே சட்டமன்றத்திற்கும், சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கும் அளிக்கும் மதிப்பாக இருக்க முடியும்.

சட்டமன்றத்தில் தம்மை புகழ்ந்து பேசக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக தமது கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்த பிறகும் கூட உறுப்பினர்கள் அந்த அறிவுறுத்தலை ஏற்காமல், அவரை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது என்ற பீடிகையுடன் புகழ் பாடத் துவங்குவது அதிர்ச்சியளிக்கிறது.

அந்த புகழ்ச்சியுரைகள் அதற்கடுத்து உதயநிதி வரைக்கும் நீள்கின்றன.
பண்பட்டதொரு அரசியல் நாகரீகத்தை உருவாக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயன்று கொண்டிருக்கிறார்.

அவரது கட்சி உறுப்பினர்களும் அதற்கு துணை நிற்க வேண்டும். கண்ணியத்துக்குரிய சட்டமன்ற அவை இனிமேலும் கட்சிகளின் பொதுக்கூட்ட மேடையாக இருக்க வேண்டாம்.

படிக்க வேண்டும்

spot_img