fbpx
Homeதலையங்கம்புகழ் கிரீடத்தில் மேலும் ஜொலிக்கும் ஒரு வைரக்கல்

புகழ் கிரீடத்தில் மேலும் ஜொலிக்கும் ஒரு வைரக்கல்

இந்திய மண்ணில் மிகச்சிறந்த தலைமைகளை சட்டமன்றத்தில் கவுரவிக் கும் பாரம்பரியம் தமிழ்நாட்டில் உள்ளதை நான் அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, அண்ணா, காமராஜர், ஈ.வெ.ரா.பெரியார், டாக்டர் அம்பேத்கர், முத்துராமலிங்கத்தேவர், காயிதேமில்லத், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார், வ.உ.சி,. பி.சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் போன்ற தலைவர்களின் படங்கள் இந்தப் பேரவையில் ஏற்கனவே உள்ளன.

இப்போது தன் வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கருணாநிதியின் உருவப்படமும் இருக்கும். அவர் தனது இறுதி மூச்சின்போது, இந்த மண்ணும், மக்களும் அனைத்து துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் அடைந்துள்ளதாக திருப்தியடைந்திருப்பார்.

தனது நீண்டகால ஆக்கப்பூர்வமான வாழ்க்கையில், தான் விழித்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் தமிழக மக்களுக்கான சேவைக்காகவும், தேசத்தின் சேவைக்காகவும் செலவிட்டோம் என்பது அவருக்கு திருப்தியளித்திருக்கும்.

மொழி மீது ஆர்வம் கொண்ட அரசியல் தலைவர்கள் வெகுகுறைவு. கலைஞரை பொறுத்தவரை அவரது தாய்மொழி வழிபாட்டுக்குரியது. தமிழ் நிச்சயமாக மனிதகுலத்தின் மிகச்சிறந்த, மிகப்பழமையான மொழிகளில் ஒன்றாகும்.

ஆனால் தமிழ்மொழியை செம்மொழியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்தவர் கருணாநிதி. கலைஞர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு தலைவராக திகழ்ந்தார்.

நமது தேசிய இயக்கத்தின் தலைவர்களுடன் நமக்கு இருந்த கடைசி இணைப்புகளுள் அவரும் ஒருவர் என்று புகழாரம் சூட்டிய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், கருணாநிதியின் புலமைகளை மிகப்பாங்குடன் எடுத்துக் கூறினார்.

அவருடைய அரசியல் மதி நுட்பத்திற்காகவும், சீரிய சிந்தனைத்திறனுக்காகவும் இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களாலும் போற்றப்படுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக கருணாநிதி தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இதயங்களை வென்றார்.

அவர் மக்களின் முதல்வர் என்று அன்புடன் அழைக்கப்பட்டார் என்று புகழ்மாலை சூட்டினார்.

சட்டமன்றம் நூற்றாண்டு விழா கொண்டாடும் நாளில், நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியும், தமிழ்நாட்டின் முதல் குடிமகனான கவர்னரும் புகழாரம் சூட்டியதும், ஏற்கனவே ஒளிவிட்டு திகழும் கருணாநிதியின் புகழ் கிரீடத்தில் மேலும் ஜொலிக்கும் ஒரு வைரக்கல்லாகும்.

படிக்க வேண்டும்

spot_img