ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது வரவேற்கத் தக்கது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 50 மைக்ரானில் இருந்து 75 மைக்ரானாக அதிகரிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 120 மைக்ரானாக அதிகரிக்கப்படவுள்ளது.
தூய்மை இந்தியா திட்டப்படி கழிவு மேலாண்மையை மாநில அரசுகள் திறம்பட செயல்படுத்தி வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் நாடு முழுவதும் கழிவு மேலாண்மை மேலும் மேம்படும்.
புதிய நடைமுறைகளை அமல்படுத்த தேசிய அளவில் செயல்குழு அமைக்கப்படும் என்றும் தெரிகிறது. பாராட்டுக்கள்.



