அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கோவை மற்றும் நேரு நகர் மற்றும் ராயல் அரிமா சங்கம் சார்பாக பன்னிமடை ஊராட்சி பகுதியில் 75 வது சுதந்திர தின விழா, கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா அகில இந்திய ரியல் எஸ்டேட் கட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் வடக்கு மண்டல தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகிக்க, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மாவட்ட தலைவரும் தேசிய அமைப்பு செயலாளருமான நேரு நகர் நந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார்.
தொடர்ந்து அனைவருக்கும் இனிப் புகள் வழங்கப்பட்டது.
பின்னர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசிய நேரு நகர் நந்து, ரியல் எஸ்டேட் துறையில் தமிழக அரசு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதற்கு தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார்.
விழாவில்,சைன் வுட் கார்த்திகேயன், விஜயராகவன் ஆர்.ஆர். தியாகராஜன் வேல்முருகன் சசிகுமார் மோகன்ராஜ் ஐயப்பன் பண்ணிமடை ஊராட்சி தலைவர் மருதாச்சலம், ஒன்றிய தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் ஆறுச்சாமி, பிளே லேமினேஷன் கிருஷ்ணமூர்த்தி, டயல் புரோஸ் சந்தோஷ், சபரி கன்சக்சன் ஆனந்த் மற்றும் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



