கோவை பெரியநாயக் கன் பாளையம் புதுப்பு தூரில் கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் அமைந்துள்ளது.
இங்கு அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி பெற்ற 25 மகளிர் தொழில்முனைவோர்க்கு மகளிர் திட்ட இயக்குநரும் துணை ஆட்சியருமான ரமேஷ்குமார் அவர்கள் பயிற்சி சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் கனரா வங்கி சார்பாக 75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மரக்கன்று களை அதன் உதவி பொதுமேலாளர்கள் டி. ரமேஷ் மற்றும் ஜி.ரமேஷ் ஆகியோர் நட்டனர். பயிற்சி மைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி, விழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
மகளிர் திட்ட அதிகாரிகள் குமரவேல், முத்து, லதா, தெய்வம், சுபா, குமுதா, பிருந்தா, அஜிதா ஆகியோர் பாராட்டு பெற்றனர். பயிற்சியாளர் கணேசன் நன்றி கூறினார்.



