உலகின் தலைசிறந்த தங்கம் மற்றும் வைரங்களை விற்பனை செய்யும் மலபார் நிறுவனம், “இந்தியாவின் மணப்பெண்கள்” என்ற தலைப்பில் தங்களது 9-வது பதிப்பை, சிறந்த கருத்துப் பாடலுடன் வெளியிட்டுள்ளது.
இது குறித்து மலபார் குழுமத் தலைவர் எம்.பி.அகமது கூறியதாவது:
மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தனது “பிரைட்ஸ் ஆப் இந்தியா 2021” (“இந்தியாவின் மணப்பெண்கள்”) என்ற ஆபரண விற்பனை திட்டத்தை துவக்கி உள்ளது. இதற்காக “மேக்வே பார் தி பிரைட்ஸ்” என்ற திருமணப் பாடலை அறிமுகப்படுத்தி உள்ளது.
புதுமணப்பெண்களுக்கும் அவர்களது பிரமிப்பூட்டும் தனித்தன்மைக்கும் எங்களது “இந்தியா வின் மணப்பெண்கள்” பிரச்சாரப் பாடலை அர்ப்ப ணிக்கிறோம். இப்பாடலை “தி புக் புல்” என்ற இந்தி மொழிப்படத்தை இயக்கிய குலாட்டி இயக்கி உள்ளார்.
நவீனமயமான தற்போதைய திருமணங்களில் மணப்பெண் வருகை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். இது முக்கிய அம்சமாகவே மாறிவிட்டது. மணப்பெண் ஆடம்பரமாக அரங்கிற்குள் நுழைவதை இப்பாடல் சிறப்பாக காட்சிப்படுத்தி உள்ளது.
3 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடியதாக இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திருமணப் பாடல் சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்ட 48 மணி நேரத்தில் 2 மில்லியன் பேர் அதைக் கண்டு ரசித்துள்ளனர்.
மலபார் தங்க, வைர நகைக் கடையின் விளம்பர தூதுவராக உள்ள அனில்கபூர், கரீனா இருவரும் நாட்டின் பல்வேறு பகுதி மணமக்களுடன் இப்பாடல் காட்சியில் பங்கேற்றுள்ளனர்.
எங்களது நகைகளின் பிரமிப்பை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் வெளிப்படுத்தியதில் மணப் பெண்களின் பங்கு அதிகம். நாடு முழுவதிலும் உள்ள பெண்களின் நகைகளின் விருப்பத்தையும் தேவையையும் பூர்த்தி செய்துள்ளது.
பெண்களின் வாழ்க்கையில், திருமண நாள் மிகப் பெரிய தருணம். அது அவருடைய தினம். அதனைச் சிறப்பாக்க நகை களை அணிந்து மிளிர்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.



