fbpx
Homeபிற செய்திகள்வல்லம் கிராமத்தில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்

வல்லம் கிராமத்தில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் நயினார்கோவில் வட்டாரம் வைகை வடிநிலப்பகுதி வல்லம் மாதிரி கிராமத்தில் உள்ள ஒற்றை சாளர தகவல் மையத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற, விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக குடற்புழு நீக்கம் முகாம் நடந்தது.

வேளாண்மை இணை இயக்குனர் ராமநாதபுரம் டாம் பி சைலேஷ் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) ஷேக் அப்துல்லா முன்னிலை வகித்தார்‌. கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் சீதாலட்சுமி விவசாயிகளின் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தார்.

பின்னர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நடைபெற்ற
முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, ஊட்டமேற்றிய தொழு உரம் செயல்விளக்கம் நடத்தப்பட்டது.

ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறை பயன்பாடு குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பி.ஜி.நாகராஜன் விளக்கினார்.

ஒற்றைச்சாளர தகவல் மையத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப ஆலோசனை கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குனர் நீர் வரவு செலவு பற்றி விளக்கினார்.

நீர்வள நிலவள திட்டம் பணிகள், திருந்திய நெல் சாகுபடி, உயர் விளைச்சல் செயல் விளக்க திடல் மற்றும் திட்ட மான்யம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் கோவில் பானுபிரகாஷ் விளக்கினார்.

பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பரமக்குடி கார்த்திக், மீன்வளத் துறை ஆய்வாளர் சாகுல், வேளாண்மை விற்பனை துறை வேளாண்மை அலுவலர் உலகு சுந்தரம், நுண்ணீர் பாசனம் வேளாண்மை உதவி இயக்குனர் மயில் ஆகியோர் தொழில்நுட்ப உரையாற்றினர்.

உதவி வேளாண்மை அலுவலர் சீதா லட்சுமி நன்றி கூறினார். இந்த மையத்தில் நடைபெற்ற கால்நடை முகாம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டத்தில் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img