நைக்கா நிறுவனத்தின் நான்காம் ஆண்டையொட்டி, தரமான பொருட்களை மிகக்குறைந்த விலையில் விற்க தயாராக உள்ளது.
இந்த ஆண்டின் சிறப்பு விற்பனை வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது. 40 % தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
உதாரணமாக லாக்மி, மேபெல்லினி, எல் ஓரல் பேரிஸ்,நைக்கா காஸ்மெடிக்ஸ், காய் ப்யூடி, ஹுதா ப்யூடி,ப்ளம் பயோடிக், நியூட்ரோஜினா, விக்டோரியா சீக்ரேட்ஸ், முராட் ஆகியவற்றுடன் தனி பரிசுப் பொருட்களும் உண்டு.
இவற்றுடன் சேர்த்து நைக்கா தயாரிப்புகளை வாங்கும்போது அதற்கான கிட்டுகளையும் காம்போக்களையும் பெறலாம். உதட்டுச்சாய நாள்: ஜூலை 28, 29 அன்று சர்வதேச உதட்டு சாய தினமாக நைக்கா உற்பத்தியால் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
இரண்டு உதட்டு சாயங்கள் வாங்கினால் 1 முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அணுகுமுறையிலும், தள்ளுபடியிலும் கட்டாயம் ஒவ்வொரு நாளும் சிறந்த மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். எனவே இதுதான் தள்ளுபடி என்று முடிவெடுத்துவிட முடியாது.
விற்பனையின் போது இதைவிடவும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம். ஆயிரக்கணக்கான தயாரிப்புகளை ஒரே சமயத்தில் பார்ப்பது கடினமேயாகும். அத்தகைய சிரமத்தை போக்கவே இப்படி ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறோம்.
5000 ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கு, அனைவருக்கும் பிடித்த ஜான்வி கபூர் கையெழுத்திட்ட மேக்கப் கிட் பேக் இலவசமாக கிடைக்கும். அல்லது நைக்காவில் முதல்முறையாக பர்சேஸ் செய்பவர் என்றால் 1000 ரூபாய்க்கு மேல் வாங்கும் தயாரிப்பிற்கு 300 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
எனவே உங்கள் அழகு அல்லது தனிப்பட்ட பராமரிப்பு அலமாரியைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் ஏங்கிக் கொண்டிருந்தால், இப்போதே உங்கள் தயக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு எங்கள் தயாரிப்பை தேர்ந்தெடுத்து மகிழுங்கள்.
இவ்வாறு நைக்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



