தூத்துக்குடி விவேகம் ரமேஷ் பல்கலை., செனட் மெம்பராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா துணை செயலாளரும், விவேகம் குரூப்ஸ் நிர்வாகியுமான தூத்துக்குடி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள விவேகம் ரமேஷ் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் மெம்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
மனோன் மணியம் பல்கலைக்கழகத்தின் செனட் மெம்பராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், விவேகம் ரமேஷை நியமித்துள்ளார். செனட் மெம்பர் பதவி மூன்றாண்டு காலமாகும்.
விவேகம் ரமேஷ் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டு தமிழக அளவில் சிறந்த பல்கலைக்கழகமாக மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகம் உயர அனைத்து நடவடிக்கையும் எடுக்க உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்தார்.
பா.ஜ., மாநில செயலா ளராகவும் (ஓபிசி அணி) விவேகம் ரமேஷ் உள்ளார். செனட் மெம்பராக நியமிக்கப்பட்டுள்ள விவேகம் ரமேஷுக்கு பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்களும் தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியின் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



