ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 1972ல் அரசு உதவி பெறும் கல்லூரியாக துவங்கப்பட்டது. தற்போது பொன்விழா ஆண்டில் தடம் பதிக்கிறது.
கல்லூரி செயலர், தாளாளராக பாலுசாமி உள்ளார். முதல்வராக கணினியில் துறை பேராசிரியர் சங்கரசுப்ரமணியன் உள்ளார். கல்லூரி சுயநிதிப் பிரிவின் இயக்குநராக முன்னாள் முதல்வர் வெங்கடாசலம் உள்ளார்.
மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. ஈரோட்டின் முதல் தன்னாட்சி தகுதி பெற்ற கல்லூரி இது.
தேசிய தரமதிப்பீட்டு குழு அங்கீகாரம் பெற்றது. மாணவ, மாணவியர் சிறந்த கல்வி, வேலை வாய்ப்பை பெற முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஆய்வகங்கள் மிக நேர்த்தியாக, உயரிய தரத்தோடு நவீன உபகரணங்கள் கொண்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் கல்வி கற்று தரப்படுகிறது.
2019-20ம் கல்வியாண்டில், 738, 2020-21ம் கல்வியாண்டில் 752 பேருக்கு சிறந்த தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு துறை வழங்க வழி செய்தது.
இங்குள்ள ஐ.ஏ.எஸ்., அகாடமி மூலம் மாணவ, மாணவியருக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற, 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தமிழக அரசு தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், அதிக இளங்கலை பாடப்பிரிவுகளை கொண்ட கல்லூரியாக உள்ளது. அரசு உதவிபெறும் பிரிவில், 10 இளங்கலை பாடப்பிரிவுகளும், சுயநிதிப் பிரிவில், 20 இளங்கலை பாடப்பிரிவுகளும் செயல்படுகிறது.
அரசு உதவிபெறும் பிரிவில் பி.ஏ. பொருளியல், பி.காம்., பி.காம் (கார்ப்பரேட் செகரட்ரிஷிப்), பி.பி.ஏ., பி.எஸ்சி., கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், எலக்ட்ரானிக்ஸ் பாட பிரிவுகள் உள்ளன.
சுய நிதி பிரிவில் பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பி.காம்., பி.காம் (சி.ஏ), பி.காம் (பி.ஏ), பி.காம் (பி.எப்), பி.காம் (கார்ப்பரேட் செகரட்ரிஷிப்), பி.காம் (பி.ஐ), பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.எஸ்சி, சி.டி., பி.எஸ்சி. ஐ.டி., பி.சி.ஏ., பி.ஏ., தமிழ், ஆங்கிலம் வரலாறு, பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம், பி.பி.ஏ., பாட பிரிவுகள் உள்ளன.



