fbpx
Homeபிற செய்திகள்ஏழை, எளிய மாணவர்கள் படித்து பட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பெற… டாக்டர் ஆர்ஏஎன்எம் கலை மற்றும்...

ஏழை, எளிய மாணவர்கள் படித்து பட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பெற… டாக்டர் ஆர்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தி முதலியார் எஜூகேஷனல் டிரஸ்டால் ஈரோட்டில் ரங்கம்பாளையத்தில் 1995ஆம் ஆண்டு மாணவிகளுக்கு தனியாக ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது .

2005 ஆம் ஆண்டில் இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டு, டாக்டர் ஆர் ஏ என் எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்னும் பெயரில் கடந்த 26 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகள் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை பெற்று வருகின்றனர்.

சாதனை செம்மல் திரு கே கே பாலுச்சாமி அவர்கள் செயலர் மற்றும் தாளாளராக பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 15 ஆண்டுகளாக கல்லூரி வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது.

தி முதலியார் எஜூகேஷனல் டிரஸ்டின் துணை தலைவராக இருந்து தனது உழைப்பால் முன்னேறி தற்போது தலைவராக உள்ள திரு. ஏ ராஜமாணிக்கம் அவர்கள் மற்றும் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் சாதனை செம்மல் திரு கே கே பாலுச்சாமி கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.

கல்லூரி பணியில் நீண்ட அனுபவமும் திறமையும் வாய்ந்த டாக்டர் ஏ. பழனியப்பன் முதல்வராக கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

தற்சமயம் கல்லூரியில் வேலைவாய்ப்பு தரக்கூடிய 14 இளநிலை பாடப்பிரிவுகளும் 2 முதுநிலை பாடப்பிரிவுகளும் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திறமை மற்றும் தகுதி வாய்ந்த பேராசிரியர்களால் கல்வி கற்பிக்கப்பட்டு எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் 100 சதவீத தேர்ச்சியுடன் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதன்மை மாணவர்களாகவும் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

தி முதலியார் எஜுகேஷனல் ட்ரஸ்டின் மூலமாக கட்டமைக்கப்பட்ட காற்றோட்டமான வசதியுடன் கூடிய வகுப்பறைகள், நூலகங்கள் மற்றும் நவீன ஆய்வகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் மாணவர்களின் கல்விக்கு பெரும்பங்கு வகிக்கிறது.

மாணவர் களின் தனித் திறமையை வெளிக்கொணரும் பொருட்டு அவர்களுக்கு இயலிசை, நாடகம், சிறந்த பேச்சாற்றல் மற்றும் எழுதுவதற்கான பயிற்சி வழங்கப் பட்டு ஊக்குவிக்கப்படுகிறது.

தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் மூலமாக மாணவ மாணவிகளுக்கு சுயமாக தொழில் செய்ய ,சோப்பு தயாரித்தல், ஊதுபத்தி தயாரித்தல், பினாயில் தயாரித்தல் மற்றும் சாக்பீஸ் தயாரிக்க கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

மாணவ மாணவிகளை நாட்டு நலப்பணித் திட்டம் ,இளம் செஞ்சுருள் மற்றும் செஞ்சிலுவை அமைப்புகளுடன் இணைத்து அவர்களை ஒரு சிறந்த குடிமகனாக உருவாக்குகிறோம்.

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் எங்கள் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து , ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி வளாகத்தில் நடத்தும் வேலைவாய்ப்பு முகாமில் எங்கள் மாணவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று நல்ல நிலையை தங்கள் வாழ்வில் அடைந்து வருகிறார்கள்.

மாணவ மாணவிகள் ஒழுக்கம் மற்றும் பண்புடன் தரம் வாய்ந்த கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற எங்கள் கல்லூரியில் சேர்ந்து நீங்களும் பயனடைய வேண்டுகிறோம்.

படிக்க வேண்டும்

spot_img