மக்கள் கூட்டம் அதிகளவு கூடினால் கொரோனா பரவலுக்கு மிக எளிதாக வழிவகுத்துவிடும். இது மூன்றாவது அலைக்கு சிவப்பு கம்பளம் விரித்தாற்போல் ஆகிவிடும் என்பதால் தமிழக அரசு உஷாராக செயல்பட்டு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கை பக்தர்களுக்கு கசப்பு மருந்தாக இருந்தாலும், கொரோனா பரவலை தடுக்க இது முக்கியமான நடவடிக்கை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்தனர்.
இருப்பினும் பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கோவில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு தமிழக அரசு மீண்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களின் கூட்டம் அதிகளவில் கூடாமல் தடுத்து முறைப்படி தரிசனம் செய்வதற்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதை பின்பற்றி பக்தர்கள் நேற்று மீண்டும் தரிசனத்தை துவக்கினர்.
விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது மக்களின் கடமை.
கொரோனா ஒழிப்பு பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும்.
இல்லையேல் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடும். கொரோனா எதிர்ப்பு போராட்டம் என்பது இனி அரசின் கையில் இல்லை. மக்கள் கையில் தான் உள்ளது.
நமக்கு சவால் விடும் பொது எதிரியை வீழ்த்த நாம் அனைவரும் ஒரு அணியில் ஒன்றுகூடுவோம்.



