fbpx
Homeபிற செய்திகள்லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் - கோவை...

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் – கோவை ஆட்சியர் சமீரன் நடவடிக்கை

கோவையில் அரசு மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் லஞ்சம் பெறுவதை தடுப்பதற்காக நேற்று மாவட்ட கலெக்டர் சமீரன் வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் லஞ்சம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க 9597787550 என்ற பிரத்யேக வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வையில் படும்படியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ‘லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்’ என்ற பலகை வைத்திருக்க வேண்டும்.

லஞ்சம் பற்றிய புகார்களை நேரிலோ அல்லது செல்ஃபோன் வாயிலாகவோ தெரிவிக்கும் விதமாக காவல் துணைக் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக முகவரி, செல்போன் எண்ணுடன் கூடிய பலகை வைத்திருக்க வேண்டும்.

இதில் இயக்குநர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, எண்- 293, எம்.கே.என்.சாலை, ஆலந்தூர், சென்னை-16. தொலைபேசி எண்: 044-24615989, 044-24615929, 044-24615949. காவல் துணைக் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, எண்-4, முதல் தெரு, ராமசாமி நகர், தீயணைப்புத் துறை அலுவலகம் அருகில், கவுண்டம்பாளையம், கோவை-30, தொலைபேசி எண்: 0422-2449500 மேற்கண்ட அலுவலகங்கள் தவிர கோவையில் லஞ்சம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் அளிப்பதற்கு 95977 87550 என்ற பிரத்யேக வாட்ஸ் ஆப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமும் பொதுமக்கள் லஞ்ச புகார்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் இந்த அதிரடி நடவடிக்கை அரசு அதிகாரிகளிடம் கலக்கத்தையும், பொதுமக்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img