fbpx
Homeபிற செய்திகள்நகைக் கண்காட்சி விற்பனை கோவையில் தொடக்கம்

நகைக் கண்காட்சி விற்பனை கோவையில் தொடக்கம்

கோவை அவினாசி ரோட்டில் உள்ள ரெசி டென்சி ஓட்டலில், கலா ஷாபைன் ஜூவல்ஸ் சார்பில், தங்க நகைக் கண் காட்சி விற்பனை தொடக்க விழா இன்று (செப்.16) நடந்தது. வரும் 18-ம் தேதி வரை இக்கண்காட்சி நடக்கிறது.

தங்க நகை கண்காட்சி விற்பனையை சூப்பர் பிரிடிங் பார்ம் இயக்குனர் கவிதா பழனிச்சாமி, அம்மா சேவை அறக் கட்டளை நிறுவனர் சோனாலி பிரதீப், ஆப் காம்ப் விட்கெட்ஸ் இயக்குனர் பிரீத்திகா பாலாஜி, பாரஸ் அப் பாரல்ஸ் இயக்குனர் பல்குனிபடானி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

கலாஷாவின் இயக் குனர் அபிஷேக் சந்தா மற்றும் சந்தா ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: இந்த கண்காட்சி வரும் 18-ம் தேதி முடிய 3 நாள் நடக்கிறது.

கண்காட்சியில் கலைநயமிக்க தங்கநகைகள் வைரம், ஜடாவ் வெள்ளி நகைகள், பூஜை அறை, உணவு டின்னர்செட் உள்பட பல இடம்பெற்று உள்ளன.
கண்காட்சி லாப நோக்கம் இல்லாமல் நடத் தப்படுகிறது. கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடக்கிறது என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img