இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் (IPPB), டாடா AIG ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடன், தனது ஆயுள் சாரா காப்பீட்டுத் திட்டங்களை நாடு முழுவதும் விநியோகிப் பதற்கான செயல் திட்டக் கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
இக் கூட்டணியின் ஒரு பகுதியாக, IPPB அதன் வலுவான வலையமைப்பின் 650 கிளைகள் மற்றும் 136,000 -க்கும் மேற்பட்ட வங்கி அணுகல் புள்ளிகள் மூலம் குடிமக்களுக்கு மலிவுவிலையில் காப்பீட்டு திட்டங்களை வழங்க முயற்சிக்கும்.
திட்டங்களின் நோக்கங்களாக சுகாதார மற்றும் ஆரோக்கியக் காப்பீட்டுத் திட்டங்கள், தனிநபர் விபத்து, வாகனக் காப்பீடு ஆகி யவை திகழ்கின்றன. மைக்ரோ ஏடிஎம்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் பொருத்தப் பட்ட சுமார் 200,000 தபால் சேவை வழங் குநர்கள் (கிராமின் தக்சேவக்ஸ் மற்றும் போஸ்ட்மேன்கள்) இந்த காப்பீட்டு தயாரிப்புகளின் விநியோகம் மற்றும் ஊக் குவிப்பில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓஜெ.வெங்கட்ராமு கூறியதாவது: IPPB எங்கள் வாடிக்கையாளர்களின் நிதி தேவைகளை மலிவான மற்றும் அணுகக்கூடிய தீர்வுகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது.
பஜாஜ் அலையன்ஸ், டாடா AIG உடனான எங்கள் செயல்திட்டக் கூட்டாண்மைகள் அந்த தொலைநோக்கு பார்வையை ஈடேற்ற உதவும்.
இந்த கூட்டாண்மைகள் மூலம், நாங்கள் எங்கள் காப்பீட்டு வழங்குபட்டியல் சலுகைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு எளிய முறையில், வீட்டுவாயில் உதவி செயல்முறையின் கீழ், டிஜிட்டல் முறையில் காப்பீட்டு சேவைகளைப் பெறஉதவும் என்றார்.
டாடா AIG ஜெனரல் இன்சூரன்ஸின் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அலுவலருமான நீலேஷ் கார்க் கூறியதாவது: வாடிக்கையாளர்களுக்குப் புரியும் வகையில் எளிமையான புதிய வயது தொழில்நுட்பம் கொண்ட புதுமையான தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
டாடா AIGயின் நம்பிக்கை மற்றும் IPPBயின் செறிவான பாரம்பரியம் ஆகியவை பல்வேறு வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களுடன் நம்பிக்கையையும் நீண்ட கால இணைப்பையும் உருவாக்க உதவும் என் றார்.



