ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில், மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக் சிஜன் உற்பத்தி நிலையம் செயல்பாட்டைத் தொடங்கியது.
இதை, டிடீடிசி மற்றும் பிரான்ஸ் -ன் லீகுரூப்லா போஸ்ட்-க்கு சொந்தமான அதன் பங்குதாரர் ஜியோ போஸ்ட் SA (DPD குழுமம்) ஆகியவை, நாராயணா ஹிருதாலயா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் நாராயணா ஹிருதாலயா லிமிடெட் ஆகியவற்றோடு இணைந்து செயல்படுத்தியது.
ஜெய்ப்பூரிலுள்ள நாராயணா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை டிடீடிசி -ன் தலைவர், நிர்வாக இயக்குனர் சுபாஷிஷ் சக்கரவர்த்தி, தொடங்கி வைத்தார்.
டிடீடிசி, நாரா யணா ஹெல்த் ஆகிய நிறு வனங்களின் முதன்மை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.டிடீடிசி -ன் தலைவர், நிர்வாக இயக்குனர் சுபாஷிஷ் சக்கரவர்த்தி பேசியதாவது: யுஎஸ்ஏவில் இருந்து இறக்குமதி செய் யப்பட்டிருக்கிறது இந்த மிக நவீன ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.
கோவிட் சிகிச்சைக்கான ஆதரவிற்கு எமது கார்ப்பரேட் சமூகப் பொறுப்புறுதி செயல்திட் டத்தின் அங்கமாக நாராயணா ஹிருதாலயா சாரிட்டபிள் டிரஸ்டிற்கு ரூ.1.56 கோடி என்ற கணிசமான பங்களிப்பை நாங்கள் செய்திருக்கிறோம்.
ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் என்ற அளவில் மருத்துவதரத்திலான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இத்தகைய ஜெனரேட்டர்கள், கோவிட் தொற்று பாதிப்பின் போது இன்றியமையா உயிர்காக்கும் சிகிச்சை நட வடிக்கைகளில் முக்கிய பங்காற்றுகின்றன.
உயிர் காக்கும் ஆக்சிஜனை தொலை தூரத்திலிருந்து போக்கு வரத்து வாகனங்க ளில் எடுத்து வருவதற்கான தேவையையும், அதுதொடர்பான சிக்கல் களையும் இத்தகைய நகர அடிப்படையிலான ஆலைகள் பெரிதும் குறைக்கும் என்றார்.
நாராயணா ஹெல்த் – ன் பிராந்திய இயக்குனர் அருணேஷ் புனிதா கூறியதாவது: டிடீடிசி எக்ஸ்பிரஸ் நிறுவனம் எமது பார்ட்னர்களாக இணைந்திருக்கிற நிலையில், ஆயிரக்கணக்க £னவர்களுக்கு உயர் சிகிச்சை அளித்து உயிர் காக்கும் பணி மீது சிறப் பான தாக்கத்தை முற்றிலும் ஏற்படுத்த இயலும் என்றார்.
ஜெய்ப்பூர் நகரில் வசதியற்ற, ஏழை எளியவர்களுக்காக இலவச தடுப்பூசி போடு வதற் கான மாபெரும் செயல்நடவடிக்கையும் இந்நிகழ்வின்போது மேற் கொள்ளப்பட்டது.



