fbpx
Homeதலையங்கம்தொழிலாளர் ஓய்வூதியம்: விரைவில் இனிக்கும் செய்தி!

தொழிலாளர் ஓய்வூதியம்: விரைவில் இனிக்கும் செய்தி!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது ஊழியர்களுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கும் திட்டத்தில் உள்ளது.

இதன்படி, அடுத்து வரும் மாதங்களில் ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

இம்மாதம் (பிப்ரவரி) நடைபெறும் கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இது தொடர் பான முடிவை எடுக்கும்.

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்புசாரா துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

இந்த பென்சன் உயர்வு குறித்து ஏற்கனவே பலமுறை விவாதிக் கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கிய பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை மேற்கொள்ளவிருக்கிறது.

சென்ற 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமே குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் தற்போது குறைந்தபட்ச பென்சன் தொகை 9,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்தும் பரிசீலனை நடக்கவுள்ளது.

வரும் மாதங்களில் பென்சன் தொகை கணிச மாக உயரும் என்ற நம்பிக்கையுடன் ஓய்வூதியர்கள் கனமான எதிர்பார்ப்புடன் காத்திருக் கிறார்கள்.
இனிக்கும் செய்தி விரைவில் வரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img