இந்திய அரசு சார்பில் டிஜிட்டல் நாணயம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிரிப்டோ நாணயங்கள் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவற்றின் மீதான வருமானத்திற்கு வரி விதிப்பும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பின்னணியில், டிஜிட்டல் ரூபாய் தொடர்பான ஆர்வம் அதிகரித்துள்ளது.
காகித வடிவில் அல்லாமல் மின்னணு வடிவிலான அரசின் இறையாண்மை கொண்ட நாணயமாக விளங்கும். இது ரூபாயுடன் மாற்றக்கூடியதாக இருக்கும். தங்கம் அல்லது இதர இருப்பை அடிப்ப டையாக கொண்டிருக்கலாம்.
மின்னணு பணப் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான பிளாக்செயின் நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அமைந்திருக்கும். இதற்கான பிளாக்செயின் வலைப்பின்னல் அரசால் சொந்தமாக உருவாக்கப்படும்.
பிட்காயின் உள்ளிட்ட எண்ணற்ற கிரிப்டோ நாணயங்கள் போன்றதே டிஜிட்டல் ரூபாய் என் றாலும், அரசின் ஆதரவோடு மத்திய வங்கியால் வெளியிடப்படுவது இதன் பலமாகும்.
இதன் மதிப்பி லும் பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு இருக்காது.
இதன் சாதகம் என்ன? மின்னணு வடிவில் எளிதாக கையாளலாம். பரிவர்த்தனைகள் பாதுகாப்பாகவும் இருக்கும்.
நிகழ் நேர பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும். சர்வதேச அளவில் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளலாம். நேரடி மானியங்கள் போன்ற வற்றுக்கும், நிதி அமைப்புகள் வேகமாக கடன் வழங்கவும் வழிவகுக்கும்.
அதே நேரத்தில் கிரிப்டோகரன்சியை அனுமதிக்கலாமா என்பதும் விவாதப்பொருளாகி வருகிறது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த வாரம் நிதிக் கொள்கையை வெளியிட்டுப் பேசுகையில், தனியார் க்ரிப்டோகரன்சிகளால் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவற்றில் முதலீடு செய்வோர் கவனமாக இருக்க வேண்டும்என்று கூறியிருந்தார்.
கிரிப்டோகரன்சியை தடை செய்வது மிகச் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி.ரபி சங்கரும் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து, “கிரிப்டோகர்னசிகள் பொன்ஸி திட்டங்களுக்கு நிகரானவை. அவற்றைத் தடை செய்வதே இந்தியாவுக்கு விவேகமான வாய்ப்பாகும். கிரிப்டோகரன்சிகள் மெய்நிகர் கரன்சிகள். அவை ஒரு பொருளும் அல்ல, சொத்தும் அல்ல. அவை பணம் போன்றவையும் அல்ல.
அவற்றிற்கு உள்ளார்ந்த மதிப்பு ஏதும் இல்லை. அதனால் தான் அதனை பொன்ஸி திட்டங்களுக்கு நிகரானவை ஏன் அதைவிட மோசமானவை என்று நான் கூறுகிறேன்” என்றார்.
பொன்ஸி திட்டம் என்றால் என்ன? இது ஒரு தனிநபரோ, ஒரு நிதிநிறுவனமோ சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் நடத்தும் திட்டம்.
இதில் சேர்வோருக்கு அதனை நடத்துபவர் தனது லாபத்திலிருந்து பணத்தைத் திருப்பித் தராமல், இன்னொரு நபரிடமிருந்து பெறும் தொகையை திருப்பித் தருவார்.
இதற்காக சிறிய, புதிய முதலீட்டாளர்கள் ஆசை வார்த்தைகள் கூறி ஈர்க்கப்படுவர். இதனுடன் தான் கிரிப்டோகரன்ஸி திட்டத்தை ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஒப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு தொடர்ந்து கிரிப்டோ கரன்சிகள் மீது தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வரு கிறது. தனியார் கிரிப்டோகரன்சிகளை நம்ப வேண் டாம், ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளது.
கிரிப்டோ கரன்சிகளை நம்ப வேண்டாம் என்று கூறி சந்தேகத்தை கிளப்பிவிடுவதை விட அதனை தடை செய்து ஏமாறுவதில் இருந்து மக்களை காப்பாற்றலாமே.
இந்தியாவின் டிஜிட்டல் ரூபாய் விரைவில் புழக்கத்துக்கு வரட்டும்; வரவேற்போம்!



