சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று அரசு இட ஒதுக்கீட்டின் மூலம் நடப்பாண்டில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வான மாணவ, மாணவியர்கள் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உடன் முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் (ஆத்தூர்) ஜெமினி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் உள்ளனர்.



