திராவிட முன்னேற்றக் கழக கோவை மேற்கு மாவட்டம் சார்பில், 22-வது வார்டில் கழக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 4-ம்ஆண்டு நினைவஞ்சலி கூட்டம், சேரன் மாநகர் முதல் பேருந்து நிறுத்தம் மற்றும் 4-வது பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நடை பெற்றது.
கோவை மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் த.பிரபாகரன் தலைமை வகித்து, டாக்டர் கலைஞ ரின் சாதனைகள் மற்றும் கட்சிக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவர் பட்ட துயரங்கள் குறித் தும் பேசினார். கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.



