இந்தியாவில் தண்ணீர் பம்ப் மற்றும் வால்வுகள் தயாரிப்பில் முன்னணியாக திகழும் கேஎஸ்பி நிறுவனம் கோவையில் நடைபெற்ற டீலர்கள் மாநாட்டில், விவசாயம் மற்றும் பிற பணிகளுக்கு தேவையான தண்ணீர் எடுப்பதற்கான புதிய மோட்டார் பம்ப்புகளை அறிமுகம் செய்தது. கோவையில் இந்நிறுவனத்தின் டீலர்கள் மாநாடு நடைபெற்றது.
இதில் இந்நிறுவனத்தின் 2021-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் துவக்கத்தில், உள்நாட்டில் உள்ள நுகர்வோருக்கு தேவையான புதிய ‘அக்வா பம்ப்’களை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த அக்வா மாடல் பம்ப்புகள் உள்நாட்டு வாடிக்¬ கயாளர்களின் அதிகரித்து வரும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தயாரிக் கப்பட்டுள்ளன.
இதில் தற்போது ஸ்மார்ட், சன்னி, ஸ்போர்ட்டி, சிம்பா, சிம்பா பிளஸ், சுமோ, ஹல்க் மற்றும் ஹல்க் பிளஸ் ஆகிய மாடல்களில் பம்ப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இந்த புதிய மோட்டார் பம்ப்புகள் 0.5எச்பி முதல் 1.5எச்பி வரையிலும், ஒரு மணி நேரத்தில் 4,400 லிட்டர் வரை தண்ணீர் எடுக்கும் வகையிலும், 66 மீட்டர் தூரத்திற்கு தண்ணீரை பாய்ச்சும் திறன் கொண்டதாக உள்ளது.
இவை உங்களின் தண்ணீர் எடுக்கும் தேவைக்கு ஏற்ப அதாவது தண்ணீர் தொட்டிகளுக்கு தண்ணீர் எடுக்க, உயரமான கட்டிடங்களுக்கான தண்ணீர் தேவை, தோட்டக்கலை மற்றும் சிறு பண்ணை பாசனம், கட்டுமான பயன்பாடுஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் இவை அலுமினியம், அலுமினியம் டை காஸ்ட் மற்றும் வார்ப்பிரும்பு போன்ற 3வித உலோகங்களில் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் பரோக் பத்தேனா கூறியதாவது:அறிமுகம் செய்துள்ள புதிய தயாரிப்புகள் மோட்டார் விற்பனை சந்தையில் நல்ல வரவேற்பை பெறும். வரவிருக் கும் ஆண்டுகளில் இந்த துறையில் எங்கள் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும் என்றார்.
1800 233 1299 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் வாடிக்கையாளர்களின் புகார்களை இந்நிறுவனம் உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறது. நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 325க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் உள்ளன.



