தமிழக மின்துறை அமைச்சராகவும் கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சராகவும் திறம்பட பணியாற்றிக் கொண்டிருப்பவர்தான் செந்தில் பாலாஜி.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றாலும் கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை அதிமுகவே பெற்றது.
அதன் பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டிய பொறுப்பை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சொந்த மாவட்டமான கரூரோடு கோவை மாவட்டத்தையும் கையிலெடுத்து பம்பரமாக சுழன்று அவர் ஆற்றிய பணியால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தை திமுகவின் எஃகு கோட்டையாக மாற்றி, முதல்வரிடம் சமர்ப்பணம் செய்தார், செந்தில் பாலாஜி. இது அவரது டார்கெட்டுக்கு கிடைத்த வெற்றி.
தற்போது இன்னொரு அருஞ்சாதனையையும் அவர் சத்தமில்லாமல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அது என்ன? திமுக அரசு பொறுப்பேற்ற பத்தே மாதங்களில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகளை வழங்கி செந்தில் பாலாஜி அசத்தி இருக்கிறார்.
இத்தனை குறுகிய காலத்தில் இத்தனை பெரும் சாதனையை செய்து முடித்திருப்பது சாதாரண விஷயமே அல்ல. இது அவரது இன்னொரு டார்கெட் வெற்றி.
அதனால் தான் ஒரு லட்சமாவது இலவச மின்இணைப்பை வழங்கிப்பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜியைப் பொறுத்தவரையில் ஒரு டார்கெட் வைத்துப் பணியாற்றக்கூடியவர். அந்த டார்கெட்டை எப்படியும் முடித்துக் காட்டக் கூடியவர் என்பதை நிரூபித்து இருக்கிறார் என புகழ்ந்துரைத்தார்.
பன்முகத் திறன் கொண்ட செந்தில்பாலாஜியை பொறுப்பு அமைச்சராக பெற்றிருப்பது கோவை மாவட்ட மக்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பு என்றால் மிகையல்ல.
அந்த அளவுக்கு கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முன்னேர் பூட்டி செயலாற்றி வருகிறார். அவர் தொடர்ந்து டார்கெட்களை வைத்து சாதிக்கப்போகும் சாதனைகளின் எண்ணிக்கை தொடரட்டும்.
முதல்வரின் பாராட்டும் தொடரட்டும்!



