fbpx
Homeபிற செய்திகள்சாத்தூரில் சுற்றுலா மாளிகை உட்பட ரூ.6.16 கோடியில் கட்டிட பணிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

சாத்தூரில் சுற்றுலா மாளிகை உட்பட ரூ.6.16 கோடியில் கட்டிட பணிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன் வடிவமைக்கப்பட்ட பணிமனை கட்டிட கட்டுமான பணிகள் மற்றும் பொதுப் பணித்துறையின் சார்பில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மாளிகை கட்டிடப் பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தலைமை வகித்தார்.

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுரா மன் முன்னிலை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் செய்தியாளர்கள் பயணத்தின் போது பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களி டம் அமைச்சர் தெரிவித்ததா வது:
மு.க.ஸ்டாலின் தலைமையி லான அரசு, தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப திறன் தொழிலா ளர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

2021-22-ம் ஆண்டு தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மானியக் கோரிக்கையில், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரம் உயர்த்திட அனைத்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும் புனரமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவப்பட்டு, எதிர்காலத் தேவையினை பூர்த்தி செய்திட புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப் படும். பயிற்றுநர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி வழங்கிட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பன்மடங்கு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தற்போது 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில் 4.0 தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ்(M/s. TATA Technologies Ltd.) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில் நுட்பங்களுடன் இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்களுடன் ரூ.2,877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு, தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட வுள்ளன. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், அருப்புக் கோட்டை ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி மையம் 4.0 தொடங்கப்படவுள்ளது.

அதன் முதற்கட்டமாக, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன் வடிவமைக்கப்பட்ட பணிமனை கட்டிட கட்டுமான பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டிடமானது 10,568 ச.அடி. பரப்பளவில் பணி மனை, 4 வகுப்பறைகள், கணினி அறை, கூட்ட அறை, ஆசிரியர்கள் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்சாலை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி பிரிவு, உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன் பிரிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திப் பிரிவு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதனால் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் கள் பயிற்சி பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் ஏற்படும்.

தனியார் தொழிற்ப யிற்சி நிலைய மாணவர்கள், பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரும் குறுகிய கால பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.

சாத்தூரில் சுற்றுலா மாளிகை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.2.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த சுற்றுலா மாளிகை கட்டிடமானது, இரண்டு தளங்களை கொண்டதாக கட்டப்படவுள்ளது.

தரைத்த ளம் 2216.50 ச.அடியிலும், முதல் தளம் 2216.50 ச.அடியி லும் அமைய இருக்கிறது. தரைத்தளத்தில் நுழைவு முகப்பு கூடம், ஒரு கூட்ட அறை, காத்திருப்பு அறையுடன் கூடிய இரண்டு படுக்கையறைகள், ஒரு உணவு உண்ணும் அறை மற்றும் 2 ஒப்பனை அறைகளும், முதல் தளத்தில் காத்திருப்புக்கூடம், காத்திருப்பு அறையுடன் கூடிய இரண்டு படுக்கையறைகள் மற்றும் இரண்டு படுக்கைய றைகள் போன்ற அனைத்து வச திகளுடன் கட்டப்பட உள்ளது.

இதனால், இந்தப்பகுதிக்கு மக்கள் பணிகளை மேற் கொள்ள வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அலு வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் என வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் பயணத்தின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிக்குமார், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் செல்வகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், சாத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், நகர்மன்ற தலைவர் குருசாமி, உதவி செயற்பொறியாளர் செந்தூர், வட்டாட்சியர் வெங்கடேஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img