அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகை அதி கரித்துள்ளதால் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற முடிவு வரவேற்கத்தக்கது.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்ததாவது: அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர் மாணவர் விகிதாசார தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.
கணக்கு மற்றும் கருவூல துறையின் பணிகளை எளிதாக்கும் வகையில் மாவட்டம் தோறும் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
புதிதாக அரசு பணியில் சேருவோர் பதவி உயர்வு பெற்றோருக்கு பணி தொடர்பான பயிற்சிகள் அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.



