fbpx
Homeபிற செய்திகள்கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே நிலைக்குழு ஆய்வு

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே நிலைக்குழு ஆய்வு

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி சார்பில் 16 எம்பிக்கள் ஆய்வு மேற்கொண்டனர்.கோவை ரயில் நிலையத்தில் இந்தியன் ரயில்வே கமிட்டி சேர்மன் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி.,களும் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் ரயில் நிலையத்தில் உள்ள கைத்தறி ஆடைகளையும் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் எம் எல் ஏ செய்தியா ளர்களிடம் கூறியதாவது:ரயில்வே நிலைக்குழு கமிட்டி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி.,க்கள் நேற்று கோவை வந்து, இன்று கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ரயில்வே அமைப்புகள் மற் றும் பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று ரயில் நிலையத்தை பார்வையிட்டனர். ஒன் ஸ்டேஷன் ஒன் பிராடக்ட் பிரதம மந்திரியின் திட்டம் எப்படி செயல்படுகிறது என நேரடியாக ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு 15 நாட்க ளுக்கும் இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற பொருள் களுக்காக ரயில்வே துறை அவர்களின் பொருட்களை மிக குறைந்த வாடகையில் இங்கு கடை போட்டு விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை உருவாக்கி உள்ளது. குறிப்பாக தென் தமிழகத்திற்கு திருச்செந்தூர் ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு கோவை யிலிருந்து ரயில்வே சேவையை தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம்.

வடகோவை ரயில் நிலையத் தை இன்னும் சீரமைத்து கோவை மத்திய ரயில் நிலையத்தில் உள்ள கூட்டத்தை குறைக்க வடகோவையில் பயணிகள் ஏறி இறங்கி செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத் துள்ளோம். கோவை ரயில் நிலை யத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கையை தென்னக ரயில்வே தயாரித்து வருகிறது. அதனால் பக்கத்தில் உள்ள நிலங்களை எடுப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறார்கள். நமக்கு தேவைப் படக்கூடிய நிலம் கிடைத்தால் உலகத்தரம் வாய்ந்த காந்தி நகர் ரயில் நிலையம் போல கோவை ரயில் நிலையத்தை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய க்கூடிய ஆலோசனை இன்று நடைபெற்றுள்ளது. ஆய்வில் டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img