கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி, கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கும் கடந்த 10ம் தேதியும் 24ம் தேதியும் கோவை பி.ஆர்.எஸ். வளாகத்திலுள்ள மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், பந்துகளை சேகரித்தல், தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர், இசை நாற்காலி, சாக்கு ரேஸ், உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்களும், அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.
இப்போட்டிகளுக்கான பரிச ளிப்பு விழா நேற்று (24ம் தேதி) மாலை 6.30 மணிக்கு கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் கோவை மாநகர ஆயுதப்படை காவல் துணை ஆணையர் முரளி தரன், காவல் உதவி ஆணையர் சேகர், காவல் ஆய்வாளர் பிரதாப் சிங், காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டார்கள்.



