கோவை மாநகராட்சி திருச்சி சாலை அல்வேனியா கான்வென்ட் பகுதியிலுள்ள மழைநீர் வடிகாலில் தேங்கிய செடி, கொடிகளை அகற்றி மழைநீர் வெளியேற்றுவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு தேங்கிய செடி, கொடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி பணியை விரைவாக செய்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உள்ளனர்.



