லார்சன் அண்டு டுப்ரோ நிறுவனம் அதன் சமூக பொறுப்பு முன்னெடுப்பின் கீழ் உருவாக்கிய இரண்டு ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சித் திட்டங்கள், சூலூரில் உள்ள கலங்கல் கிராமத்தில் நடந்த விழாவில், தமிழக அர சின் வேளாண்துறை, துணை இயக்குநர் ஷபி அகமது வசம் ஒப்படைக் கப்பட்டன. இதன் மூலம் 19 ஆயிரம் பேர் பயனடைவர்.
இந்த திட்டங்களை கடந்த 2015-ம் ஆண்டு மாவட்ட கிராம மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர் தா. முருகன் தொடங்கி வைத்தார்.
எல் அண்டு டி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சித் திட்டம், மதுக்கரையில் 2 ஆயிரம் ஹெக்டேர், சூலூரில் 1585 ஹெக் டேரையும் உள்ளடக்கியுள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் எல் அண்டு டி நிறுவனத்தின் கார்ப்பரேட் மையத்தின் தலைவர் டாக்டர் ஹசீத் ஜோசிபுரா கூறியதாவது: ‘ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு திட்டத்தில் எல் அண்டு டி நிறுவனத்தின் செயல்பாடுகள் தனித்துவமானவை.
உள்ளூர் மக்களுக்கு நீண்ட கால நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். 2015-ல் எல் அண்டு டி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு திட்டப்பணிகள் கிராமப்புற மக்களால் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படுவதே எல் அண்டு டி நிறுவனத்தின் சமூக பொறுப்பு மக்களுக்கு மிகவும் பலனளிக்கிறது என்ற சான்றுகளில் ஒன்றாகும்.
எல் அண்டு டி நிறுவனத்தின் செயல்பாடுகளின் தாக்கம் இங்கு வெளிப்படையாக தெரிகிறது. ஆழ் துளை கிணறுகளில் நீர்மட்டம் 940 அடியிலிருந்து 550 அடிக்கும் திறந்தவெளி கிணறுகளில் 55 அடிக்கும் உயர்ந்துள்ளது.
மண்ணில் மேற் கொண்ட செயல்பாடுகள் மூலமாக 732 ஹெக்டேர் அளவுக்கு கூடுதல் விளைநிலங்கள் பயனளிக்கின்றன. மேலும் 587 ஹெக்டேர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த செயல்பாடுகள் மூலம் தோட்டக்கலை மேம்பாடு 80 ஹெக்டேர் அளவுக்கும் பயிர்களின் விளைச்சல் 25 சதவீதமும் உயர்ந்துள்ளது.
30 ஆயிரம் டன் பசுந்தீவனம் மற்றும் 15 ஆயிரம் உலர் தீவனம் கிடைப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதால் இதன் விளைவுகள் கால்நடை வளர்ப்பிலும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. நிலமற்ற விவசாயிகளின் குடும்பங்களுக்கு 500 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதுடன், 4 அரசு பள்ளிகளுக்கு சுகாதார வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்றார்.
என்எஎப் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டாக்டர் எம்.ஆர். ராமசுப்ரமணியன், தன்னார்வ நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து கூறுகையில், ‘தொடக்கத்திலிருந்தே திட்டமிடல், செயல்படுத்துதல் ஆகியவற்றில் உள்ளுர் மக்களுடன் இணைந்து செயல்பாடுகளை மேற் கொண்டோம்.
இந்த திட்டங்களின் உரிமை, பராமரிப்பு ஆகியவற்றில் உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் சமூக உறுப்பினர்கள் குறிப்பாக மிகவும் பலமான வகையில் பெண்கள் பங் கேற்க வைக்கப்பட்டனர்’ என்றார்.
தற்போது எல் அண்டு டி நிறுவனத்தின் திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து (18) பள்ளிகளிலும் தர மான கல்வியை வழங்குவதற்கான அணுகுமுறையை மேம்படுத்தும் செயல்பாடுகளை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
எல் அண்டு டி நிறுவனத்தின் சமூக பொறுப்பு கொள்கை என்பது, ‘இந்தியாவின் சமூக உள்கட்டுமானத்தை உருவாக்குதல்’ என்பதாகும்.



