fbpx
Homeபிற செய்திகள்கோவையில் உதயநிதி பிறந்தநாள் விழா

கோவையில் உதயநிதி பிறந்தநாள் விழா

கோவை மாநகர், காந்திபுரம் ராமநாதபுரம் பகுதி திமுக சார்பில், இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின், 44 வது பிறந்தநாள் விழா 70வது வட்டம் புலியகுளத்தில் கொண்டாடப்பட்டது.


நிழச்சியில் சிறப்பு விருந்தினராக பகுதி கழக செயலாளர் பசுபதி கலந்துகொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர்கள் சந்திரன், நவீன் பாலமுருகன் மற்றும் அண்ணா கலைஞர் அன்பு படிப்பகம், முத்தமிழறிஞர் கலைஞர் மன்றம், அம்மன்குளம் அண்ணா நினைவு மன்றம், திராவிட சூரியன் மன்றம், ஹவுசிங் யூனிட், பாரதிபுரம், தாமுநகர் உள்ளிட்ட மன்றங்களின் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img