விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கான கிட்டங்கி பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் ஆர்.கோபால்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இப்பயிற்சியில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பெ.கிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர்/துணைப்பதிவாளர் ஜே.பிராங்ளின் தாமஸ் மற்றும் கோவை சரகத்திற்குட்பட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



