கோவை இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை ஆகஸ்ட் 3ல் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்களுக்கு அனுமதி சான்றிதழினை கோவை மண்டலம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் வழங்கி சிறப்பித்தார்.
பயிற்சி நிலைய துணைப்பதிவாளர் \ முதல்வர் பெ.கிருஷ்ணன், மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்\பணியாளர் அலுவலர் ராஜகோபால், பயிற்சி நிலைய அலுவலர்கள் ர.வித்யா, மு.கார்த்திகைசெல்வி, இரா. சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



