fbpx
Homeதலையங்கம்கூடுதல் இடம் வரவேற்கத்தக்கது

கூடுதல் இடம் வரவேற்கத்தக்கது

மாணவ, மாணவிகள் அரசுக்கல்லூரிகளில் இடமில்லாமல் மனம் கலங்கி இருந்த சூழ்நிலையில் 25 சதவீதம் இடம் கூடுதலாக வழங்கப்படும் என்ற ஆணை மிகவும் வரவேற்புக்குரியது. மாணவர்கள் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அரசு கல்லூரிகளில் கூடுதல் இடம் கொடுப்பதற்கு கூறப்படும் அதே காரணங்கள் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கும், தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கும் நிச்சயம் பொருந்தும்.

அரசு கல்லூரிகளை போல, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதலாக 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முதலமைச்சருடன் ஆலோசனை வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசு கல்லூரிகளில் 25 சதவீதம் கூடுதல் இடம் வழங்கப்பட்டதை போல அரசு உதவிபெறும் தனியார் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

பல்கலைக்கழகங்களும் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே அந்த கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளின் வேண்டுகோளாகவும், விருப்பமாகவும் இருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img