நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுகுளா, ஊராட் சிப் பகுதி களில் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல் வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா (செப்.16) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நெடுகுளா ஊராட்சி யில் 14-வது நிதிக்குழுத் திட்டத்தின் கீழ்,ரூ..42 இலட்சம் மதிப்பீட்டில் குனியட்டி சாலை மேம்ப டுத்தல் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், குனியட்டி பகுதியில் ரூ.3.96 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணி, பேருந்து செல்லும் சாலை சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கப்பட்டி பள்ளியாடா சாலை முதல் கடைகம்பட்டி சாலை வரையிலான சாலை மேம்பாட்டு பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் கப்பட்டி கிராமத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தினையும் ,தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில், உலக வங்கி நிதியின் கீழ், கஸ்தூரி பாய் நகரில் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நுண்ணுயிர் உரம் தயாரித்தல் கூடம், 15-வது நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.8.33 இலட்சம் மதிப்பீட்டில் கஸ்தூரி பாய் நகரில் 111 வீடுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன்
திட்டத்தின் கீழ், குடிநீர் குழாய் இணைப்பு பணி, 15-வது நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.8.62 இலட்சம் மதிப்பீட்டில் சன்சைனி நகரில்115 வீடுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், குடிநீர் குழாய் இணைப்பு பணி, 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் அம்மன் நகரில் 60 வீடுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், குடிநீர் குழாய் இணைப்பு பணி என மொத்தம் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன்,
செயற் பொறியாளர் சுஜாதா, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், ஜெய்சங்கர், உதவி பொறியாளர் ஜெகனாரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



