fbpx
Homeதலையங்கம்குழந்தைகளை பாதுகாப்போம்!

குழந்தைகளை பாதுகாப்போம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலோனோர் பாதிக்கப்படும் குழந்தைக ளின் உறவினர்களாகவோ அல்லது அறி முகமானவர்களாகவோ இருக்கின்றனர். 60 வயதைத் தாண்டிய முதியவர்களும் இந்த கேடு கெட்ட காரியத்தில் ஈடுபடுவதும் அடிக்கடி நடப்பது வேதனை தருவதாகும்.

இம்மாதிரி நிகழ்வுகள் நடப்பதற்கு பெற்றோர்களின் அஜாக்கிரதை முக்கிய காரணமாகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளை அவர்கள் எத்தனை வயதினராக இருந்தாலும் கண்ணை இமை காப்பது போல காத்திட வேண்டும். ஏனெனில் கோழிக் குஞ்சுகளை வேட்டையாட வரும் கழுகுகள் போல காமக் கொடூரன்கள் அலைந்து திரிகின்றனர்.

பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்த அச்சம் இல்லாததும் குற்றங்கள் பெருகுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. போக்சோ சட்டம் மூலம் போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

தண்டனைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டுமோ என்ற கேள்வியும் எழுகிறது. அதோடு பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் தற்போது நிலவும் காலதாமதம் கூடவே கூடாது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மட்டுமே போக்சோ நீதிமன்றங்கள் உள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் 14,380 வழக்குகளில் 7,187 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. நிலுவை வழக்குகளை கணிசமாக குறைக்க வேண்டும்.

சில நேரங்களில் குழந்தைகளின் உயிரோடும் பாலியல் குற்றவாளிகள் விளையாடி விடுகிறார்கள். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்க அதிதீவிர நடவடிக்கை எடுத்து, குழந்தைகளைக் காக்க வேண்டியது மிக அவசியம்; மிக அவசரம்.

எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களை உடனடியாக துவங்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கச் செய்வதை நீதிமன்றமும் அரசும் உறுதி செய்யவேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img