சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், கிருஷ்ணகிரி இந்திய மருத்துவ சங்க வளாகத்தில், ஓலா மின்சார இருசக்கர வாகனம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் தொடர் முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசந்திர பானு ரெட்டி பார்வையிட்டார்.



