இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,189 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 387 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,79,815 ஆக உள்ளது.
மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,189 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 500 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,47,79,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 387 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,79,520 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,286 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,23,263 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 77,032 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 141,01,26,404 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 66,09,113 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ள நிலை யில், 115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தளவில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒமைக் ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநி லங்களுக்கு மத்திய குழு விரைகிறது.
மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்ட குழு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஜார்கண்ட், பஞ்சாப், மிசோரம் உள்ளிட்ட மாநி லங்களுக்கும் செல்கிறது. தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.



