fbpx
Homeதலையங்கம்ஈரோடு ரயில்நிலையத்தில் 2 நடைமேடைகள் நீட்டிப்பு

ஈரோடு ரயில்நிலையத்தில் 2 நடைமேடைகள் நீட்டிப்பு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் 2 நடைமேடைகள் நீட்டிப்பு செய்யப்படும் என்று சேலம் கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாசன் தெரிவித்தார்.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் சென்னி மலை கைத்தறி நெச வாளர் கூட்டுறவு சங் கத்தின் விற்பனை அங்காடியை அவர் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த பட்ஜெட்டில் உள்ளூர் பொருட்களின் விற்ப னையை அதிகரிக்க ரயில் வே ஸ்டேஷன்களில் இதற்காக விற்பனை அங் காடி திறக்க அறிவிப்பு செய்யப்பட்டது அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ரயில் வே நிலையத்தில் ஒரு அங்காடி திறக்கப்பட்டது

அதன்பிறகு சேலம் கோட்டத்தில் தற்போது ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் கைத்தறிதுணி கள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு இது செயல்படும்.

இதன் வெற்றியை பொறுத்து உற்பத்தியாளர்களுக்கு சுழற்சி முறையில் இந்த அங்காடி தரப்படும். இதன் மூலம் உள்ளூர் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை ஊக்கு விக்கப்படும்.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் போதிய வசதிகள் ஏற்கனவே உள்ளன புதிதாக ரயி ல்வே பிளாட்பாரம் அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லை எனவே ஏற்கனவே உள்ள இரண்டு ரயில்வே பிளாட்பாரம் நீட்டிப்பு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஈரோடு அடுத்த சென்னி மலை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் மிக குறுகலாக உள்ளது. இதை உயர்த்தி கட்டுவதற்கு ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு செய்தது ரயில்வே பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை நெடுஞ்சாலைத்துறை இனி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோட்டில் இருந்து தனியாக பொருள் போக்குவரத்துக்கு என இரும்புப் பாதை அமைக்க திட்டம் இல்லை எனினும் விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு 45% வரை ரயில்வே கட்டண சலுகை அளிக்கப்படுகிறது

ஈரோடு ரயில்வே ஸ்டே ஷனில் பொருட்கள் பாதுகாப்பு அறை விரை வில் துவக்கப்படும் இதற் காக டெண்டர்கள் பரிசீ லிக்கப்பட்டு வருகிறது
ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூருக்கு பயணிகள் ரயில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவக்கப்பட்டது

இதர ரயில்களும் படிப்படியாக இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

படிக்க வேண்டும்

spot_img