fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் 'கல்விப் பணி, வேலைவாய்ப்பில் முன்னோடி' 156 நிறுவனங்களில் 1742 மாணவர்களுக்கு...

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் ‘கல்விப் பணி, வேலைவாய்ப்பில் முன்னோடி’ 156 நிறுவனங்களில் 1742 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

1992-ல் ஆரம்பிக்கப்பட்ட ஓர் கல்விப் பயணம், இன்று 18 கல்வி நிறுவனங்களைக் கொண்ட, ஒரு மாபெரும் கல்வி சாம்ராஜ்யமாக, ஈரோடு மாவட்டத்தில் உருவெடுத்துள்ள நந்தா கல்வி நிறுவனமானது, மருத்துவக் கல்வி தொடங்கி பொறியியல் வரை, பள்ளிக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை என அனைத்திற்கும் மாணவர்களின் சிறப்பான தேர்வாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
சிறந்த தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமன்றி, படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்தி தருகின்றது என பெருமிதத்துடன் கூறுகிறார் ஈரோடு நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன்.

ஈரோடு- பெருந்துறை சாலையில் பசுமையான சூழலில் அமையப் பெற்ற நந்தா கல்வி நிறுவனத்தின் கீழ் பார்மஸி, பல் மருத்துவம், பிஸியோதெரபி, நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ், இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சி.பி.எஸ்.சி. பள்ளிகள் என 18 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள்,1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உள்ளடக்கிய மாபெரும் நிறுவனமாக கொங்கு மண்டலத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது நந்தா கல்வி நிறுவனங்கள்.

NAAC, NBA அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள்:
தேசிய அளவிலான அங்கீகாரம் குறித்து கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் எஸ். ஆறுமுகம் கூறியதாவது:

நந்தா கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும் நந்தா பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பிஸியோதெரபி கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரிகள் ஆகியவை NAAC (National Accreditation and Assessment Council) தரச்சான்றிதழ்கள் பெற்றவையாகும். மேலும் நந்தா பொறியியல் மற்றும் பார்மஸி கல்லூரிகள் NBA (National Board of Accreditation) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

தன்னாட்சி அதிகாரம்:
நந்தா பொறியியல் கல்லூரி, அதன் தரம், சிறந்த செயல்பாடுகள், சிறப்பான உள்கட்டமைப்பு, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விகிதம், ஆய்வுத்துறையில் சிறந்து விளங்குதல் போன்றவற்றிற்காக புதுடெல்லி பல்கலைக்கழக மானியக்குழுவும் (UGC), சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து நந்தா பொறியியல் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்தை (Autonomous) வழங்கி உள்ளது என்றார்.
“நல்ல ஊதியத்தில் பணி”

ஜப்பான் நாட்டில் “யொக்கொஹாமா” மாகாணத்தில் பணிபுரியும் முன்னாள் இயந்திரவியல் துறை மாணவர் ஜிதின் கிருஷ்ணன் கூறும்போது, நந்தா கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் பலர் இந்தியாவின் தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள உயர் நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நந்தா பொறியியல் கல்லூரியில் சிறப்பான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், உலகத்தரம் வாய்ந்த ஆய்வுக்கூடங்களும் மாணவர்களின் செய்முறை திறன்களை சிறப்பாக வெளிக்கொணர உதவிகரமாக இருக்கிறது என்றார் பெருமிதத்துடன்.
வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதில் சாதனை:

Capegemini நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெற்ற நந்தா பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வரும் மின்னியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை மாணவர் முகமது ஆசீம் கூறும்போது, நந்தா என்றாலே வேலைவாய்ப்பு என்ற கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பில் புதிய மைல்கற்களை கல்லூரி எட்டி வருகிறது. இந்த 2021-22-ம் கல்வி ஆண்டில் ஏறத்தாழ 156 தொழில்நிறுவனங்களால் 1742 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட், ஐகேட், டெக் மகேந்திரா, ஸ்பிக், என்.ஜி.ஆர்., விருசுஸாஇ சிடிஎஸ், எல் அண்ட் டி இன்போடெக், ப்ரேக்ஸ் இண்டியா, ஸ்னைடர், ஜேஸ்மின் இன்போடெக், எல்.ஜி. உள்ளிட்ட பல நிறுவனங்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு நேர்காணலை இங்கு நடத்திக் கொண்டிருக்கின்றன என்றார்.

பிறமொழி பாடத்திட்டம்:
நந்தா பொறியியல் கல்லூரியில் பிற மொழி ஆற்றலை வளர்க்கும் விதமாக ஜெர்மனி, பிரெஞ்சு, ஜப்பான், இந்தி ஆகிய மொழிகளை பாடத்திட்டத்துடன் இணைத்து கற்றுத் தரப்படுகின்றன. இதனால் பொறியியல் மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வேலைவாய்ப்பை பெற வழி வகுக்கிறது.

ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கான நிதியுதவி:
மாணவர்களின் அறிவியில் மற்றும் தொழில்நுட்ப அறிவினை வளர்க்கும் விதமாக தொடங்கப்பட்ட Innovation Club மூலமாக எண்ணற்ற கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு காட்சிப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் இத்தகைய திறனை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குத் தேவையான நிதியுதவியும், ஆய்வக வசதிகளையும் நிர்வாகம் செய்து கொடுக்கிறது. சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுத் தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலை நாட்டு பல்கலைக்கழகங்களுடன் தொழில்நுட்பத் தொடர்பு:
மலேசியா, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களுடன் (Student Exchange Programme) மூலமாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், அங்குள்ள பல அறிவியல் மற்றும் தொழில்நுடப் முன்னேற்றங்களை நமது மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாகிறது. இந்த வகையில் மலேசிய பல்கலைக்கழகமான பெட்ரோனல் யுனிவர்சிட்டியுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு (MoU) ஒப்பந்தத்தின் மூலமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக நந்தா பொறியியல் கல்லூரியைச் சார்ந்த 15 மாணவர்கள் மலேசிய நாட்டிற்குச் சென்று இரண்டு மாத இன்டென்ஷிப் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி உள்ளனர். 2017-ம் ஆண்டு 5 மாணவர்களும், 2018-ம் ஆண்டு 10 மாணவர்களும், 2019-ம் ஆண்டு 12 மாணவர்களும் நந்தா கல்வி நிறுவன உதவித் தொகையோடு மலேசியா சென்று தங்களது ஆராய்ச்சி படிப்பைப் பயின்றனர்.

கல்வி உதவித் தொகை:
சிறப்பாக பயிலக்கூடிய மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் நிர்வாகத்தின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு மட்டும் சுமார் 3.9 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர நந்தா கல்வி உதவித் தொகை தேர்வு எனும் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி மற்றும் கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன.
புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்:
நந்தா கல்வி நிறுவனத்தில் நடப்பாண்டில், நந்தா பொறியியல் கல்லுரியில் பாடப்பிரிவுகள் புதியதாக தொடங்கப்பட்டுள்ளன. ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் (Artificial Intelligence & Data Science) மற்றும் சைபர் செக்யூரிட்டி (Cyber Scurity) இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் (Internet of things) ஆகிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதிய கல்லூரி தொடக்கம்
நந்தா கல்வி நிறுவனத்தில் மேலும் ஒரு புதிய அங்கமாக நந்தா பல் மருத்துவக் கல்லூரி இந்த கல்வி ஆண்டில் (2022-2023) தொடங்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டிற்கான பல்வேறு அடித்தளங்கள்:
மாணவர்களின் தனித்திறமையை வளர்ப்பதற்காக மியூசிக் கிளப், போட்டோகிராபி கிளப் போன்ற பத்திற்கும் மேற்பட்ட கிளப்புகள் உள்ளன. இது மட்டுமின்றி, ஆங்கிலப் பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சிகள், நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்த பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுவதால் மாணவர்கள் அனைவரும் சுலபமாக வேலைவாய்ப்பினை பெற முடிகிறது என பெருமிதம் கொள்கிறார்கள், இங்குள்ள மாணவர்கள். மொத்தத்தில் மாணவர்கள் விரும்பும் அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற நல்லதொரு கல்வி நிறுவனமாகவும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் என்றும் குன்றா நந்தா விளக்காகவும் ஒளி வீசி வருகின்றன நந்தா கல்வி நிறுவனங்கள்.

படிக்க வேண்டும்

spot_img