கோவையில் பேபியாமா என்ற பெயரில் புதுசித்தாபுதூரில் என்.வி.கே. லே அவுட்டில் நவீன குழந்தைகள் மற்றும் பேறுகால தாய்மார்களுக்கான மருத்துவமனை நல மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 1) நடைபெற்ற திறப்பு விழாவில், பேபி யாமா மருத்துவ மைய நிர்வாக இயக்குநர் அஸ்வின் சங்கமேஷ் வரவேற்றார்.
கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார், சேலம் மருத்துவ நிபுணர் டாக்டர் ராமகிருஷ்ணன், டாக்டர் வேல்முருகன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர்.
பி.ஆர்.ஓ. கவுதம் நன்றி கூறினார்.
பேபி யாமா மருத்துவ மைய நிர்வாக இயக்குநர் அஸ்வின் சங்கமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த குழந்தைகள் மற்றும் மகப்பேறு தாய்மார்களுக்கான நவீன மருத்துவ நல மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கு இருதயம், நரம்பியல், பல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துவித சிகிச்சைக்கான மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
அனைத்து துறை டாக்டர்கள் இங்கு பணியில் இருப்பார்கள். முன்கூட்டியே தொலைபேசியில் பதிவு செய்தும் சிகிச்சை பெற வரலாம். ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்யலாம். தினசரி காலை 9 முதல் இரவு 9 மணி வரை மருத்துவ சிகிச்சை மையம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.



