fbpx
Homeபிற செய்திகள்கீழக்கரை நகராட்சி கூட்டம்

கீழக்கரை நகராட்சி கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர் மன்றத் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. நகர் மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல் தான் மற்றும் ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட இடங்களில் ஆபத்தில்லா வேகத்தடை அமைக்க வேண்டும். நகராட்சி அலுவலர்கள் பணி செய்வதில் ஆமை வேகத்தில் செயல்படுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

வார்டுக்குள் செல்லும்போது சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர்களிடம் தகவல் தெரிவித்து, குறைகளை கேட்டறிந்த பின்னர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நகராட்சி பொறியாளர் முகம் மது மீரான் அலி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img