fbpx
Homeபிற செய்திகள்‘இராமாயணத்தின் பலம் உறவா, நட்பா?’ சவீதா தமிழ் மன்றத்தில் பட்டிமன்றம்

‘இராமாயணத்தின் பலம் உறவா, நட்பா?’ சவீதா தமிழ் மன்றத்தில் பட்டிமன்றம்

சவீதா தமிழ் மன் றத்தின் சார்பாக இரா மாயணத்தின் சிறப்பு உறவின் பலமே அல்லது நட்பின் பலமே என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடந்தது.
ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு அறி முகப்படுத்துவதே சவீதா தமிழ் மன்றத்தின் நோக்கமாகும்.

சவீதா தமிழ் மன்றம் இலக்கியங்களை அறிமுகப்படுத்துவது மட்டு மின்றி மாதம் ஒரு முறை பட்டிமன்றமும் நடத்தி வருகிறது.

மாணவர்களின் மேடைப் பேச்சாற்றலையும், சொல்லாற்றலையும் வளர்ப்பதே சவீதா பட்டிமன்றத்தின் நோக்கமாகும். இராமாய ணத்தின் சிறப்பு உறவின் பலமே என்ற தலைப்பில் சவீதா மாணவர்களான ர.பவித்ரா, வி.வித்யா, மு.பொன்சேதுராமன் ஆகியோரும் நட்பின் பலமே என்ற தலைப்பில் ஆ.திவ்யபாரதி, ம. கரண், த.கௌசல்யா ஆகியோரும் பேசி சிறப்பித்தனர்.

மதுரை தீந்தமிழ் கல்லூரி தியாகராசர் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் இ.பேச்சிமுத்து நடுவராகப் பங்கேற்றார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் மருத்துவர் ந.மா.வீரைய்யன், துணைவேந்தர் முனைவர் சதாரம் சிவாஜி, சிமாட்ஸ் பொறியியல் பள்ளி இயக்குநர் முனை வர் இரம்யா தீபக் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

சிமாட்ஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ், சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனை வர் குனிதா அருண் சந்தோக் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

பட்டிமன்றத்தில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறப்பாகப் பேசிய சட்டக்கல்லூரி மாணவி ஆ.திவ்யபாரதிக்கு சவீதா பல்கலைக் கழக வேந்தர் மருத் துவர் ந.மா. வீரைய்யன் நினைவுப் பரிசை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img