Homeதலையங்கம்முடிந்தது எல்ஐசி, அடுத்த இலக்கு எது?

முடிந்தது எல்ஐசி, அடுத்த இலக்கு எது?

எல்.ஐ.சி., ஐபிஓ வெளியிடுவதற்கான சரியான காலகட்டம் இதுவல்ல, அப்படிச் செய்தால் பேடிஎம் போலவே இதுவும் சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இப்படியொரு பதற்றமான நிலையில் தான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் பங்கு சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தது. பங்கு சந்தையிலும் ஒரு வழியாக பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட முதல் நாளில் இருந்தே பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது இப்பங்கின் விலையானது 675 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

இந்திய பங்கு சந்தையானது பரவலான பல காரணிகளுக்கு மத்தியில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக சர்வதேச பணவீக்கம், பெடரல் ரிசர்வ் வங்கியானது அதன் நடவடிக்கையினை மேலும் கடுமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் தற்போது பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

இதற்கிடையில் எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மூலதனம் 4.3 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. சுமார் 1.7 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விலையானது 949 ரூபாயாகும். இதன் சந்தை மதிப்பானது 6 லட்சம் கோடி ரூபாயாகும்.

முதலீட்டினை அழித்த பங்கு ஆசியாவில் முதலீட்டாளர்களின் செல்வத்தை அழித்த பங்குகளில் எல்ஐசியும் ஒன்று எனலாம். ஐபிஓவில் இருந்து மட்டும் சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் பங்கு சந்தையில் நுழைந்த நிறுவனங்களில் மிக மோசமான இழப்பினை கொடுத்த பங்குகளில் எல்.ஐ.சியும் ஒன்று.

எல்ஐசி பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால், ஆங்கர் முதலீட்டாளர்கள் இனிமேல் எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யவே அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். எதிர்பார்த்த அளவு எல்ஐசி நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டவில்லை என்பதால், விற்பனை செய்யலாம். அப்போது பங்கு மதிப்பு மேலும் சரியக்கூடும்.

ஆனால் மத்திய அரசு தன்னிடம் இருந்த 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ.21 ஆயிரம் கோடி முதலீடு திரட்டியது. இதில் ஒரு சதவீத பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எல்.ஐ.சியை அடுத்து பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், தான் நினைப்பதை ஒன்றன் பின் ஒன்றாக நடத்திக்காட்டுவது தானே ஒன்றிய பாஜக அரசின் சாதனையாக இருக்கிறது.

எல்ஐசி பங்குகள் விலை வீழ்ச்சியால் பங்குதாரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்!

படிக்க வேண்டும்

spot_img