கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 10) சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பெரியார் அறிவுலகம் கட்டும் பணிகள் திமுக ஆட்சியில் தொடங்கப் பட்ட நிலையில், கடந்த அக். 16 ஆம் தேதி தமிழ் நாடு முதல்வர் ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப் பட்டது. 7 தளங்களைக் கொண்ட இந்த நூலகத் துக்கு புத்தகங்களை வாங்கி யதில் பெரும் ஊழல் நடை பெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெரு மாள் முருகன் குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், திமுக மற்றும் தவெக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நூலகத் தில் இருந்த சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது போலி புத்தகங்கள் கண்டறியப்பட்ட 4-ஆவது தளத் தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின் றனர்.



